• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷியா ஏவிய 300+ டிரோன்கள்!- பதற்றம் உச்சம்!”

Sangeetha by Sangeetha
May 27, 2025
in உலக செய்திகள்
0
உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷியா ஏவிய 300+ டிரோன்கள்!- பதற்றம் உச்சம்!”
Share on FacebookShare on Twitter

ரஷியா-உக்ரைன் இடையே 3-வது ஆண்டாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு மத்தியில் ரஷியா தனது டிரோன் வீச்சு தாக்குதல்களை அதிகரித்ததால், கடந்த வாரத்தில் 30 உக்ரேனியர்கள் இறந்துள்ளனர் மற்றும் 163 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதினை மட்டுமல்ல, உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் கடுமையாக சாடத் தூண்டி உள்ளது..

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்து வந்த ரஷிய அதிபர் புதின், சமீபத்தில் தானாக போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தார்.

அதன்பின்னர், இருநாட்டு முக்கிய பிரமுகர்கள், துருக்கி நாட்டின் தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர் கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. ஆனால் போர் நிறுத்தம் செய்வதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 390 பேர், சனிக்கிழமை 307 பேர், ஞாயிற்றுக்கிழமை 303 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான டிரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

அணிவகுத்த டிரோன்கள் குறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறும்போது, “உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறி வைத்து திங்கட்கிழமை இரவில் ரஷியா 355 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்து உள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளது.

டிரோன் தாக்குதலுக்கு முந்தைய நாள் ரஷியா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கும் முந்தைய நாள் ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

by Bharathy
May 16, 2026
0

கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை அக்கட்சியின் தேசிய...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

by Mathavi
May 15, 2026
0

ஜப்பானில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...

ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும்.!

ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும்.!

by Mathavi
May 15, 2026
0

ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட...

ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!

ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!

by Bharathy
May 13, 2026
0

சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரித்தானியா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு...

எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

by Bharathy
May 13, 2026
0

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த...

ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!

ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!

by Bharathy
May 13, 2026
0

ஈரான் போரினால் பலவீனமடைந்த தனது அதிகாரத்தையும் கௌரவத்தையும் சரிசெய்யும் நோக்கில், டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு...

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

by Bharathy
May 13, 2026
0

சவுதி அரேபியாவின் எல்லைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஈரான் மீது இரகசியமாகத் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக மேற்கத்திய மற்றும்...

வெனிசுலாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றி ட்ரம்ப் வெளியிட்ட சர்சைக்குரிய படம்!

வெனிசுலாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றி ட்ரம்ப் வெளியிட்ட சர்சைக்குரிய படம்!

by Bharathy
May 13, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மே 12 ஆம் திகதி அன்று, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், வெனிசுலாவைச் சித்தரிக்கும் ஒரு வரைபடத்தைப் பதிவிட்டார்.அதில் அமெரிக்கக்...

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின்                           கல்விக் கடனை அடைத்த இந்தியர்!

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!

by Bharathy
May 12, 2026
0

அமெரிக்கா​வின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்​லூரி​யில் ஜவுளி தொடர்​பான பாடங்கள் கற்​பிக்​கப்​படு​கின்​றன. கடந்த 8 ஆம்...

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

ஈரான் – அமெரிக்க போர் நிறுத்தம் மந்த நிலையில்!

by Bharathy
May 12, 2026
0

ஈரானுடனான போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று 12 ஆம் திகதி கூறியதைத் தொடர்ந்து ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி