• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

Sangeetha by Sangeetha
May 27, 2025
in உலக செய்திகள்
0 0
0
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
Share on FacebookShare on Twitter

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்து ஒழித்தன. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்வகையில், பாகிஸ்தான் விமான தளங்களை தகர்த்தன.

மேலும் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட “அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க” இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம், மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.

“சமாதான முன்மொழிவு” ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் (இந்தியா) “உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள்” என்பதைக் காண்பிப்பார்கள். இந்தியாவுடனான மோதலில் இருந்து எங்கள் நாடு “வெற்றி” அடைந்தது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இந்த சூழலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனியும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து உரையாற்றுகையில், “பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

Related Posts

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன்  புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு!

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு!

by Sangeetha
June 16, 2025
0

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு...

‘டொனால்ட் டிரம்ப்பை கொ*லை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது’ – நெதன்யாகு

‘டொனால்ட் டிரம்ப்பை கொ*லை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது’ – நெதன்யாகு

by Sangeetha
June 16, 2025
0

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங்...

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயம்!

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயம்!

by Sangeetha
June 16, 2025
0

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த பகுதி தீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய அரச...

அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.!

அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.!

by Mathavi
June 15, 2025
0

ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின்...

மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

by Thamil
June 14, 2025
0

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ்க்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் தாக்குதல்களை எதிர்கொண்டு இஸ்ரேலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று...

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் உயிரிழப்பு – பெரும் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் உயிரிழப்பு – பெரும் பதற்றம்!

by Sangeetha
June 14, 2025
0

இஸ்ரேல் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத்...

ஈரானில் 200 விமான தாக்குதலை 100 இடங்களில் நடத்திய இஸ்ரேல் – பழிவாங்குவோம் என ஈரான் பதில் மிரட்டல்!

ஈரானில் 200 விமான தாக்குதலை 100 இடங்களில் நடத்திய இஸ்ரேல் – பழிவாங்குவோம் என ஈரான் பதில் மிரட்டல்!

by Sangeetha
June 13, 2025
0

இஸ்ரேலின் இந்த தாக்குதல் முன்னெடுப்பு "சிங்கத்தின் வலிமை" (Strength of a Lion) எனப் பெயரிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றி...

ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: பெரும் பதற்றம் !!

ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: பெரும் பதற்றம் !!

by Sangeetha
June 13, 2025
0

இன்று காலை ஈரானின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின்...

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: போராட்டம் வன்முறையாக மாறியது – 40 காவல்துறையினர் படுகாயம்

இங்கிலாந்தில் பெண் பலாத்காரம்: போராட்டம் வன்முறையாக மாறியது – 40 காவல்துறையினர் படுகாயம்

by Sangeetha
June 13, 2025
0

இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி