கொடித்தோடை உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்த முடியாத நிலை வெளிவந்த செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
2018ம் ஆண்டு விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் 200பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு சங்கமாக கொடித்தோடை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோம் 2019ம் ஆண்டு குறித்த பழங்களை விற்பனை செய்வதில் இடையூறு காணப்பட்டது. அந்த நேரத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் மூலம் வழி அனுமதிப்பத்திரம் பெற்று விற்பனை செய்ய முடிந்தது.
உற்பத்தி அதிகரித்த போது சந்தைப்படுத்தும் நோக்கில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினர் விவசாய கம்பனிகளாக மாற்றி ஒரு வருடமாக எமது பங்குதாரர்களை உருவாக்கி சிறப்பாக செல்கிறது.
அண்மையில் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகிருந்தது. விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதில்லை என்று அது உண்மைக்கு புறம்பான தகவல் எமது இயக்குநர் சபைக்கு தெரியாது தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான செய்திகள் மூலம் விவசாயிகளுக்கும் எமக்கும் விரிசல் ஏற்படுகின்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் நிறைய நன்மைகள் நடைபெற்றுள்ளது. இதனை வண்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.