இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட விக்கிரகத்துக்கு மஹாயாகம் – கதிர்காமத்தில் பிரதிஷ்டை செல்லப்படும்!
இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு இன்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட மகாஜாகம் இடம்பெற்றது.
இந்தியா திருச்செந்தூரிலிருந்து இருந்து எடுத்துவரப்பட்ட சுப்ரமணியன் சமேத வள்ளி தெய்வானைக்கு பழனியில் விசேட மகா யாகம் இடம்பெற்று, கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்துக்கு எடுத்து வரப்பட்டது.
மாவை கந்தன் ஆலயத்தில் விசேட மஹா யாகம் இடம்பெற்று சில வாரங்கள் மாவை கந்தன் ஆலயத்தில் தங்கி இருந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து உகந்தை முருகன் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற உள்ளது.
கொழும்பு தலைநகருக்கு முருகப் பெருமான் எடுத்து செல்லப்பட்டு, கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையிலான முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் கதிர்காமத்தில் சுப்பிரமணியன் சமேதராக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
குறித்த நிகழ்வுகள் கதிர்காம ஆலய நிர்வாக உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருர் ஜீவன் தியாகராசா தலமையில் நடைபெற்றது.