அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளை (21) முதல் ஆரம்பமாகப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக சுமார் 08 இலட்சம் விண்ணப்பங்கள் நலன்புரிப் நன்மைகள் சபையினால் பெறப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த விண்ணப்பங்களில் இருந்து நிவாரணப் பலனைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் வீடு வீடாகச் சென்று இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை 3.4 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது, அதில் சுமார் 1.8 மில்லியன் பேர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற தகுதியானவர்களாக தெரிவாகினர்.
இருப்பினும், நலன்புரி நன்மைகள் சபை தற்போது 1.72 மில்லியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.