• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஆசிரியர்களின் இடமாற்றப் பிரச்சினை – போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்!

Mathavi by Mathavi
January 18, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
ஆசிரியர்களின் இடமாற்றப் பிரச்சினை – போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்!
Share on FacebookShare on Twitter

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தினையும், யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (18), இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் – மாம்பழம் சந்தியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் ஆண்டு தோறும் இடமாற்றம் நடைபெறுகின்றது. இவ்வாறு நடைபெற்றாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களிலே பணிசெய்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் ஐந்து வெளிமாவட்ட சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள், வெளிமாவட்ட சேவையை 8 அல்லது 10 வருடங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் உள நெருக்கடிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

இடமாற்ற சபையிலே தீர்மானம் எடுக்கப்படுகின்றபோது தேசிய இடமாற்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப இந்த இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களிலும் ஒரு அரசியல் சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இப்போது இருக்கின்ற அரசாங்கம் தங்களுக்கு சார்பானவர்களை பெரிய பெரிய பதவிகளில் அமர்த்துவதுடன், அரசியல் சார்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இடமாற்றத்திலேயே அரசியல் சார்பான தொழிற்சங்கங்கள் செயற்பட்டு கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தில் அண்ணளவாக 17 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இவற்றில் 80 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்கள். அவர்கள் மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வவுனியா வடக்கு – தெற்கு போன்ற அதி கஷ்ட பிரதேசங்களில் மிகவும் இன்னல்களை சந்திக்கின்றனர்.

இவர்கள் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வெளிமாவட்டத்தில் வேலை செய்கின்ற போதும் வாழ்வியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று தற்போது நாட்டில் சனத்தொகை பற்றாக்குறை. இந்த விடயத்தில் இடமாற்ற பிரச்சனையும் செல்வாக்கு செலுத்துகின்றது.

தற்போது இருக்கின்ற அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனத்தை வழங்குவதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாற்றில் பேசப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து ஒரு சுகயீன விடுமுறை போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தின் முன்னால் முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாண நகரில் ஒரு வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

Related Posts

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

by selvan
June 29, 2026
0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளில் தான சாலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மாஸ்கெலிய, நியூ சமன்புரா  ஸ்டோர்ஸ் வளாகத்தில் அதன் உரிமையாளரின் ஏற்பாட்டில் ஜஸ்கிரீம்...

கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

by selvan
June 29, 2026
0

கேகாலை மாவட்டம், கலிகமுவை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை அவரது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கலிகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே...

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது!

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது!

by selvan
June 29, 2026
0

லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைப்பதாக அறிவித்துள்ளது.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, தமது எரிபொருள் விலையை திருத்துவதாக அந்த நிறுவனம்...

பெட்ரோலின் விலை குறைப்பு!

பெட்ரோலின் விலை குறைப்பு!

by selvan
June 29, 2026
0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல்...

சமஸ்டிக்காகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது – சுமந்திரன் தெரிவிப்பு!

சமஸ்டிக்காகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது – சுமந்திரன் தெரிவிப்பு!

by selvan
June 29, 2026
0

சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என,இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது  என இலங்கை தமிழரசுக்  கட்சியின் பொதுச்செயலாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ ...

யாழ். மறை மாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம்

யாழ். மறை மாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம்

by selvan
June 29, 2026
0

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், அவர்கள் திருத்தந்தை லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய ஆயர் பேரருட்தந்தை...

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

by selvan
June 29, 2026
0

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான "முழு அதிகாரம்" கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு...

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

by selvan
June 29, 2026
0

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சோதனை நடவடிக்கைகளில் 32 மோட்டார் சைக்கிள்களும்  ஒரு முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28)...

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

by Mathavi
June 29, 2026
0

​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்...

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

by Mathavi
June 29, 2026
0

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி