சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் திருடிச் செல்லப்பட்ட உந்துருளி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
திருடிச் செல்லப்பட்ட உந்துருளியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட சம்மாந்துறை பொலிஸார் பொத்துவில் பிரதேசத்தில் குறித்த உந்துருளி உட்பட சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான உந்துருளி உட்பட சந்தேக நபரான கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது