குருநாகலில் இருந்து பதுளை முத்தியங்கனை கோயில் நோக்கி சுற்றுலா பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீண்டும் குருநாகல் செல்லும் வழியில் இன்று (24) டொப்பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தின்போது பேருந்தில் 40 பேர் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். குறித்த விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பேருந்தில் பயணித்த ஏனையவர்கள் நுவரெலியா பொலிஸாரின் ஏற்பாட்டில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பேருந்தில் இருந்த இரண்டு இளம் குழந்தைகள் மற்றொரு பேருந்தில் நுவரெலியா காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நுவரெலியா தலைமையக காவல்துறைப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


