மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 60 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.