நுவரெலியாவில் இலங்கை வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து ஊக்கத்தொகையை வழங்காததால் அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான இலங்கை வங்கிக்கு முன்பாக இன்று புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ADVERTISEMENT
இந்த போராட்டத்தில் தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள், இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தும் தற்போதைய நிர்வாகம் 6 மாத ஊக்கத்தொகையை வழங்காததால் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

