மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என்ற குடும்பஸ்தர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் அவரை குடும்ப உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கூலித்தொழிலாளியான குறித்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை(30) மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலமாக காணப்பட்டார். மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத் பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
ஹங்வெல்ல, எம்புல்கம - பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து...
கோடாவுடன் இருவர் கைது.!
கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த...
குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச்...
புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!
அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது...
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது. உலகளாவிய நெருக்கடியும் இதற்கு ஒரு காரணமாகும் என தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் நாபீர்...
போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், கண்காட்சியும்.!
போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றையதினம் நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி...
அகரவத்தை – லொனக் பிரதான பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை.!
அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் 4 கிலோமீற்றர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி வாழும் சுமார் 750...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு; வர்த்தகர்கள் போராட்டம்.!
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள...
இளம் பெண் வைத்தியர் கொ*லை; பொலிஸ் உயர் அதிகாரி கைது.!
தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய...
படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!
மாது ஆற்றில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அம்பலாங்கொடை...










