யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று 18 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று பி.ப 3:00மணியளவில், யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கள், செவ்வாய் விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.