யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரணி வடக்கு, வரணிப் பகுதியைச் சேர்ந்த கோகிலான் தவராசா (வயது 60) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தொடர்ந்து மூன்று தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். வரணி வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று முன்தினம்(8) அவர் மந்திகை வைத்தியசாலையில் மயங்கிய நிலையில், நேற்று(9) காலை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.