கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் 14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (05) முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் , வீடொன்றில் உள்ள மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!
புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது...
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில்...
செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 3 சிறுவர்களுடையது உட்பட ஒரே நாளில் மிக அதிகளவாக 19 மனித...
எவ்வித நட்டமும் இன்றி பெற்றோலை 125 ரூபாவாலும், டீசலை 110 ரூபாவாலும் குறைக்க முடியும்.!
இலங்கையில் தற்போதைய சூழலில் எவ்வித நட்டமும் இன்றி பெற்றோல் விலையை 125 ரூபாவாலும், டீசல் விலையை 110 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள்...
டெங்கு அதி அவதான வலயங்களின் பட்டியல் வெளியானது!
நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக...
GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான...
மதுபான சாலைகளுக்கு பூட்டு!
2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மதுவரி திணைக்களத்தின்...
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற் தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!
யாழ் - பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உருவான கரும்புகையால் சில நிமிடங்கள்...
சிஐடிக்கு எதிராக சுரேஷ் சலேயின் மனைவி முறைப்பாடு!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர்...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம்...










