நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்றைய தினம் (03) காலை தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த போது உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த ஊழியர் நேற்று வேலைக்கு வருகை தந்து அனைவரிடமும் பேசிவிட்டு மேசையில் சாய்ந்திருந்த வேளையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த உத்தியோகத்தர் தபால் நிலையத்தில் 14 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.