50 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத அழகுசாதனப் பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சந்தேக நபர் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 02.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து இந்த அழகுசாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.