பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான யுவதியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 41 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த யுவதி நீண்ட காலமாக சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.