ஸ்பெயின் நாட்டின் ஜராகோசா மாகாணம் வில்லாபிரான்கா டி எப்ரோ நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (15-11-2024) அதிகாலையில் இடம்பெற்றுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாவும், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த முதியோர் இல்லத்தில் 82 முதியவர்கள் வசித்து வந்த நிலையில், இறந்தவர்கள் அனைவரும் முதியோரா அல்லது அங்கு பணியாற்றியவர்களா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
அமெரிக்காவுக்குப் புறப்படத் தயார் நிலையில் ஈரான் தேசிய கால்பந்து அணி!
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பாக ஈரான் தேசிய கால்பந்து அணி அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது....
அயர்லாந்தில் கலவரம் தீவிரம்!
வடக்கு அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஒருவர்...
ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு படைகள் தற்காப்புத்...
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை முறைப்படுத்தும் உரிமை ஈரானுக்கும் ஓமானுக்கும் மட்டுமே உண்டு!
ஹோர்முஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதியானது வெறும் 21 கடல் மைல் அகலத்தைக் கொண்டது மாத்திரமே. இதனால், இந்த நீரிணை முழுமையாக ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின்...
மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) பிரித்தானிய மன்னர் மூன்றாம்...
நைஜீரியாவில் தீவிரமடையும் மனிதக் கடத்தல்!
வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட...
“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!
தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுடன், எதிரியுடன் நேரடியாக மோதவும் ஈரான் தயங்காது...
பிரித்தானிய பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்!
பிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக்...
வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல் – இந்தியரின் கடை தீக்கிரை!
வட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து...
17 பேரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கை!
பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 17 நபர்களின் அமெரிக்கக் குடியுரிமையை (Naturalized Citizenship) ரத்து செய்வதற்கான...










