வாக்களிப்பு நிலையத்திற்கு தாக்குதல் நடாத்த தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறியை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு, T-56 ரக தோட்டாக்கள், T-cut துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து லொறியின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் T-56 துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக செயற்பட்டு மேற்கொண்ட விசாரணைகளின் போது T-cut துப்பாக்கி, வெடிகுண்டுகள், மற்றும் லொறியின் மேல் பகுதியில் மெழுகு பையில் சுற்றப்பட்ட தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டன.
குறித்த லொறியம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.