இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இரத்தினபுரி -இத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அருண குமார என்ற இளைஞனுக்கு மாரடைப்பு ஏற்பட்டமையால் விளையாட்டு மைதானத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இளைஞனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.