இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்.
மதகம அளுத்வத்த, கிலிமலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.