கொழும்பு மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத குடியிருப்புக்கு முன்பாக ஜீப் வாகனமொன்று வீட்டிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மருதானை பகுதியில் உள்ள புகையிரத வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 3 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று (10) பிற்பகல் வீட்டுக்கு அருகில் ஜீப் வாகனத்தை நிறுத்துவதற்கு தந்தை பின்பக்கமாக வாகனத்தை செலுத்தியுள்ளார். அதன்போது , பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.