சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் எனக்கூறி பண மோசடி செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் எந்தவொரு அதிகாரியும் தொலைபேசி, வட்ஸ்அப் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி இதுபோன்று பணத்தை சேகரிக்கும் செயலில் ஈடுபடமாட்டார்கள். ஆகவே, சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் எனக் கூறும் மோசடியாளர்களிடம் சிக்கி வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.