நேற்றைய தினம் யாழ்ப்பாண பிராந்திய, சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது பொலிஸார் பொதுமக்களை தாக்கியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம். எஸ். ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால் , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அத்துடன் பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கின்றன. அவற்றினை அவர்கள் மீற முடியாது என குறிப்பிட்டார்.
சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.