ஐஸ்லாந்திலிருந்து முதல் முறையாக சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை 08.33 மணியளவில் துபாய் எமிரேட்ஸ் EK 650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
24 பேரை கொண்ட இந்த சுற்றுலாப் பயணிகள் குழுவானது 14 நாட்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளது.
இந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, ஹபரனை, கண்டி, சிகிரியா, பெந்தோட்டை மற்றும் எல்லை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கவுள்ளனர்.