நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கியும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு இழப்புகள், சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.