பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும்.
கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில் இடம்பெற்றது.
இதற்கமைய இன்று (01) முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பினை அளிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் வழங்க முடியும்.