நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,657 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை , கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்