கொழும்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எம்பிலிபிட்டியவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
மாதம்ப – கவுடுவாவ பகுதியில் பேருந்தில் திடீரென தீ பரவியதால் குறித்த பேருந்தானது தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் பேருந்து முற்றாக எரிந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.