11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம் – இளைஞருக்கு வழங்கிய தண்டனை11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம் – இளைஞருக்கு வழங்கிய தண்டனை குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் 22 வயதான இளைஞருக்கு 11 வருடங்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
69 வயதான மூதாட்டி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்,, ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் 7 மற்றும் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்தயா நாணயக்கார வழங்கினார்.
சிறைத்தண்டனை தவிர, குற்றவாளிக்கு அபராதமாக 20,000 ருபாவும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 5 இலட்சம் ரூபாவும் செலுத்த வேண்டும் எனவும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும், இழப்பீடு தொகையை செலுத்தத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
காலி தெலிக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரொஷான் மதுசங்க என்ற சந்தேகநபர், அவர் ஜனவரி 18, 2013 அன்று இரவு பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.