Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறும் கடவை காப்பாளரை பணியில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இணுவில் பகுதியில் நேற்று (14) மாலை புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரிடம் அப்பகுதியில் நிரந்தர புகையிரத கடவை காப்பாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுடன் இதற்கு முன்னரும் […]

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ்ஸ் அணிவகுப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த  பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது. அணிவகுப்பு நிகழ்வில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிசாரின் சீருடைகள், ஆயுதங்கள் வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டதோடுபொலிசாருக்கான விசேட அறிவுரைகளும் […]

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   குறித்த அறிக்கையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக நொர்தேன் யூனி இன் […]

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள  விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையில் புதன்கிழமை (14) தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் வளவாளராக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் மார்க்கண்டு அருட்செல்வன் பங்குபற்றினார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத […]

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கிழக்கு உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை 3.30மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது. ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.ராமச்சந்திரன் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களாக வத்திராயன் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர், வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் நடுவர் சங்க தலைவர் என பலரும் கலந்து […]

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து யாழ்ப்பாணம் – தென்மராட்சி –  A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் […]