Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு நேற்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர். பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து […]
மேஷம் aries-mesham பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். ரிஷபம் taurus-rishibum செலவுகள் அதிகரிக்கும் கோபத்தாலும், மனைவியின் கலகத்தால், குடும்பத்தில் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வுக்கு வழி பிறக்கும். மிதுனம் gemini-mithunum பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எல்லாவகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும். […]
திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (15.02.2024) பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் […]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர் அண்மைக்காலமாக கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் இவரை மருதங்கேணி பொலிசார் தேடிவந்தனர்.இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் […]
நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் நேற்று வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் சடலம் பிரேதப் […]
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் சி.சிறிதரனின் சமூக வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் – தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்! – என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய […]
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது சிவப்பு கௌபி – 1095 ரூபா வெள்ளை கௌபி – 1200 […]
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த இளைஞன் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து […]