Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது. இந்நிலையில் நேற்று குறித்த மாணவனை கைது செய்த […]
பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், பிரதான புகையிரத பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சு கிச்சு மூட்டி விளையாடிய சம்பவம் தீவிரமடைந்து அது கொலையில் முடிந்துள்ளது. திருகோணமலை சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கிச்சுக் கிச்சு மூட்டி விளையாடிக்கொண்டிருக்கும்போது கோபத்தில் ஒரு கைதி மற்ற கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான கைதி தலையில் அடிபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
“அவலோகிதேஸ்வர போதிசத்வா” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தான் புத்தரின் அவதாரம் என்று கூறிக்கொண்ட இவர், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளன. பத்து யானைகள் அடங்கிய குறித்த யானைக் கூட்டம், இன்று புதன்கிழமை காலைவேளையில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. அதேவேளை, அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களை துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண மின்சார சபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.62 ஊழியர்களை பணி நீக்கம் செய்தமை, ஊழியர்களின் இடமாற்றம், மின்பட்டியல் விலை அதிகரிப்பு, சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சட்டவிரோதத் தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய நபர் ஒருவரே உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். ‘ கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை, இந்தியாவின் கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் கச்சதீவு அமைந்துள்ளது. வருடாந்த பெருவிழா வின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கமைய தேவையான ஏற்பாடுகளை பக்தர்களின் நலன்கருதி உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படு த்தும் […]