28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கச்சதீவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் கடற்படை மும்முரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
10

இலங்கை, இந்தியாவின் கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் கச்சதீவு அமைந்துள்ளது. வருடாந்த பெருவிழா வின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
2

இதற்கமைய தேவையான ஏற்பாடுகளை பக்தர்களின் நலன்கருதி உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படு த்தும் பணியில் கடற்படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
1

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய, வடகடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ், உள்கட்டமைப்பு பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
4

இதில் சுகாதாரம் மற்றும் குடிதண்ணீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவை அடங்குகின்றன.

இதேபோன்று, வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்களை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

அயர்லாந்தின் சொந்த மண்ணில் இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை மகளிர் அணி

User1

03 சீனப் போர்க்கப்பல்களும் இந்தியப் போர்க்கப்பல் ஒன்றும் கொழும்பில் !

User1

இப்படியும் ஒரு சோதனை

sumi