Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி,கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் மற்றும் அம்பகாமம் தச்சடம்பன், ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் […]
கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தருமபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.
Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று(6) யாழ் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த […]
தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 மாத குழந்தை காயமடைந்துள்ளது. தம்புள்ளை – கண்டலம பகுதியிலிருந்து தம்புள்ளை – கண்டி பிரதான வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பெண் ஒருவரையும் வீதியோரம் நின்றிருந்த ஆண் ஒருவரையும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. -இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை புதன்கிழமை (7) காலை தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு […]
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு மீனவர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை […]
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஸ்திரேலியாவுக்கு நாளை பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இவ்விஜயத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது கஞ்சா பயிரிடலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு, “ இல்லை, அவ்வாறானதொரு பத்திரம் அமைச்சரவைக்கு வரவில்லை.” – என்று அமைச்சர் பதிலளித்தார். அதேவேளை, ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடலுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்திருந்தார் என்பது […]