28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

வேட்புமனுத் தாக்கலுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான எதிர்வரும் வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கருவிகள், ஸ்னைப்பர்கள் சகிதம் 4,500 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது

இதன் பின்னரே குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரத்நாயக்க. தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, நிர்வாகத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  லலித் பத்திநாயக்க மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் வேட்பாளர்கள், அவர்களுடன் வருபவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர், கட்டிடத்திற்குள்ளும் அதன் அருகாமையிலும் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார்கள்.

வேட்புமனுக்கள் முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை 30 நிமிட ஆட்சேபனை நேரத்துடன் 11.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதுவரை 27 வேட்பாளர்கள், தமது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர்,

ஆனால் புதன்கிழமை வரை கட்டுப்பணம் பெறப்படுவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வேட்பாளருடன் சட்டத்தரணி உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு மண்டபத்திற்குள் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

User1

கண்டி நகரை சுற்றுலா நகராக மாற்ற திட்டம் ; ஜனாதிபதி

User1

Leave a Comment