Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
கடந்த 12.01.2024 அன்று வீதி விபத்தின் போது உயிரிழந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த அமரர் அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார். அவருடைய நினைவுகூரும்வகையில் அவர் உயிரிழந்த அதே இடத்தில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், […]
அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று (10) விஜயம் செய்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான […]
புதிய களனி பாலம் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்று முன்தினம் 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார். சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் […]
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அழுத்கல பகுதியில் முச்சக்கர வண்டியும், அரச பேருந்து ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பத்தனை ஜயசிரி புரவை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் 30 வயது உடைய பெண்ணும் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரச பேருந்து அதன் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உட்பட முச்சக்கர வண்டியும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து […]
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) இரவு நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியதுடன், 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றினார். மேலும், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார ஆரம்பத்தில் இருந்து வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, இதுவரையில் கிடைத்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்