Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் […]
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் உட்பட 7 பேருக்கு எதிராக இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான கார்களைப் பதிவு செய்து அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 400 வாகனங்கள் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு […]
தந்தைக்கும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், தந்தையின் காதுகளில் ஒன்று துண்டாகியதுடன், மகனின் கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகின. இந்த சம்பவம் பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே தந்தையின் காது அறுபட்டுள்ளதாகவும், தந்தையின் தாக்குதலில் மகனின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் பல்லம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வில்பொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் விருந்துபசாரம் முடித்து வீடு திரும்பிய 56 வயதுடைய தந்தை உறங்கிக் […]
நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்இ மீண்டும் பணிப்புறக்கணிப்பில்இ நாளை (13) முதல் ஈடுபடவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன், கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கு இடையில் பகலிரவாக சிறப்பான ஒழுங்கு படுத்தல்களுடன் நடைபெற்ற மாபெரும் ஆண்/பெண் கபடி சுற்றுப்போட்டிகள் 10,11.2.2024 கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெற்றிருந்தன. ஆண்கள் 1ம் இடம் முத்தமிழன் விளையாட்டு கழகம், 2ம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகம். பெண்கள் 1ம் இடம் பாலிநகர் […]
மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மைச் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரேஷ்ட […]
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்றைய தினம் (12) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூகுள், யாகூ, அமேசான் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக திருத்தம் செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுத்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வாதிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 40 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி பத்தனை பொலிஸாரால் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது பலதடவை குறித்த 60 வயது நபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை மற்றும் அதற்கு 40 வயதுடைய நபர் உதவி செய்துள்ளமை […]
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024.02.23 ஆந் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை […]
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 5, 2023 அன்று பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான […]