Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். […]
திருகோணமலை மாவட்ட ‘Trincomalee Super 40’ கிரிக்கெட் கழத்தின் ஏற்பாட்டில் ‘Battle of East – 2024’ ற்கான இரண்டாவது மென்பந்து சுற்றுப் போட்டியை கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் திரு.மார்ட்டீன் G.ஜெயகாந்த் தலைமையில் சிறப்பாக நடாத்தி முடித்தனர். ‘Trincomalee Super 40’ மற்றும் ‘ ‘Batticaloa Masters’ ஆகிய கழகங்களுக்கிடையில் இரண்டு நாட்களில் 20 க்கு 20 ஓவர்கள் என்ற அடிப்படையில் இவ்விரு போட்டிகள் நடாத்தப்பட்டதோடு அப்போட்டிகளில் இவ்விரு அணியினரும் […]
மஹரகமவில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை (12:02:2024) கொழும்பில் இருந்து வருகை தந்த பேருந்து யாழ் எழுதுட்டுவாழ் பொலிஸ் இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால் உழவு இயந்திரத்துடன் மோதுண்டு கோர விபத்திற்குள்ளாகியுள்ளது.!!!! குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் […]
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் உட்பட 7 பேருக்கு எதிராக இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான கார்களைப் பதிவு செய்து அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 400 வாகனங்கள் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு […]
தந்தைக்கும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், தந்தையின் காதுகளில் ஒன்று துண்டாகியதுடன், மகனின் கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகின. இந்த சம்பவம் பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே தந்தையின் காது அறுபட்டுள்ளதாகவும், தந்தையின் தாக்குதலில் மகனின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் பல்லம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வில்பொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் விருந்துபசாரம் முடித்து வீடு திரும்பிய 56 வயதுடைய தந்தை உறங்கிக் […]
நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்இ மீண்டும் பணிப்புறக்கணிப்பில்இ நாளை (13) முதல் ஈடுபடவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன், கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கு இடையில் பகலிரவாக சிறப்பான ஒழுங்கு படுத்தல்களுடன் நடைபெற்ற மாபெரும் ஆண்/பெண் கபடி சுற்றுப்போட்டிகள் 10,11.2.2024 கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெற்றிருந்தன. ஆண்கள் 1ம் இடம் முத்தமிழன் விளையாட்டு கழகம், 2ம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகம். பெண்கள் 1ம் இடம் பாலிநகர் […]
மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மைச் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரேஷ்ட […]