Browsing: இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளது. ஒரே குடையின் கீழ் ஓரணியாக போட்டியிடவுள்ளது. சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் […]

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடியில் சிக்கி கிடந்த போது அவரது டைகர் எனப்படும் வளர்ப்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது எஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 66 அகவையுடை பழனி வடிவேல் ஆவர். இவர் தேன் எடுப்பதற்காக நேற்று காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். இதன்போது […]

இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடத்தப்படவுள்ளன என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை […]

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தியை பதிவு செய்துள்ள முறைமை சட்டவிரோதமானது எனவும் இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினிவித பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிராகரித்து தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனு மீதான விசாரணையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் […]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் […]

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான விசாரணையை அடுத்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

அரச அதிகாரிகளின் அலட்சியத்தால், நாட்காட்டியிலேயே இல்லாத பெப்ரவரி 30 ஆம் திகதி நடைமுறைச் சோதனைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (Practical test date) திகதி அறிவிக்கப்படும். எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சோதனைக்கான திகதியே, விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது. அதில், பதிக்கப்பட்ட இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் […]

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். இதற்கமைய, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோத மணல் […]

இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன. 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் 6 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்

பெலியத்தையில் ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று ஆஜராகிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.