Browsing: இலங்கை செய்திகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் […]

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான விசாரணையை அடுத்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

அரச அதிகாரிகளின் அலட்சியத்தால், நாட்காட்டியிலேயே இல்லாத பெப்ரவரி 30 ஆம் திகதி நடைமுறைச் சோதனைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (Practical test date) திகதி அறிவிக்கப்படும். எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சோதனைக்கான திகதியே, விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது. அதில், பதிக்கப்பட்ட இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் […]

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். இதற்கமைய, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. சட்டவிரோத மணல் […]

இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன. 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் 6 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்

பெலியத்தையில் ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று ஆஜராகிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸார் தெரிவித்தார். திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய நபர் கடந்த திங்கட்கிழமை 09 மற்றும் 05 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையக் கட்டளைத் தளபதி தெரிவித்தார். இதற்கமைய, பிள்ளைகளின் தாயார் வெளியூரில் […]

இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய தினம் […]

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின்   செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு கல்வி வலயத்திற்கு […]

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு.