Browsing: இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். இதேவேளை அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15 வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை […]

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மாத்திரம் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனி ஒரு […]

இறக்குவானை பிரதேசத்தில் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறக்குவானையை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞனே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யுவதி ஒருவருடன் காதல் […]

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க “அத தெரண” வினவிய போது பதிலளித்தார். நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விளக்கமளிக்கையில், […]

இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார். சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய […]

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் நேற்று  மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். காலை 10 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எரிபொருள் விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதால் காலை பத்து மணிக்குள் பணத்தை டெபாசிட் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் காசோலை வசதியை கழகத்திடம் கேட்டும் இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். இது தவிர,  இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, […]

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு […]