Browsing: இலங்கை செய்திகள்

கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், […]

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் அவரது அலுவலகத்தில் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

மிகிந்தலை பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்றிரவு குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை ஆயுதம் ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை, கெலே திரப்பனய, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதுடைய இளம் மனைவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார்- தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல் போன நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,, […]

யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது  கடந்த புதன்கிழமை ஆலய சூழலில் குளிர்களி விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் குளிர்களிக்குள் தவளை ஒன்று காணப்பட்டது. அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ் கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். […]

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற  நிலையில் குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் நேற்று மாலை சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டிருந்தது இச் சம்பவத்தையடுத்து, சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் இந்த நிலையில் இன்றைய தினம்(16)  தலைமன்னார் பொலிஸார் மற்றும் soco பொலிஸார் , மன்னார் நீதவான் […]

வெரஹெர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் இருந்து இரு தேயிலை பொதிகளை திருடியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார். இவர் தனது காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி அன்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக்கொண்ட […]

நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சியை சிதைக்க சிலர் சதி செய்து வருகின்றனர். பதவி ஆசையில் இந்த சதியை இவர்கள் செய்கின்றனர். அவர்களின் சதித்திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.” என்றார். “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்.” என மாவட்ட நாடாளுமன்ற […]

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை […]