Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட வெவ்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை…

இன்று புதன்கிழமை (செப்டெம்பர் 04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.4895 ரூபாவாகவும், விற்பனை விலை 303.7063 ரூபாவாகவும்…

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான…

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றைய தினம் இளவாலை…

பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையில்…

பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட…

பர்ஹான் முஸ்தபா அவர்கள் எழுதிய “மரக்கல மீகாமன்” ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா 2024.09.01 ஞாயிற்றுக் கிழமை மூதூர் பேர்ள் கிரேன்ட் மண்டபத்தில்…

தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் எவர் வென்றாலும் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நீதியமைச்சர்…

தற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம், தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையில்  செவ்வாய்க்கிழமை (03-09-2024) வந்தடைந்தது.  இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.. தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.  இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  சிசிசி 1333(ccc1333) என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.  இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்தது அவர்களுக்கு மதிய உணவு ரோட்டரிஇல்லத்தில் கொடுக்கப்ப் பட்டது        பின்னர் தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் நடாத்தப்பட்டது. அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.