பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 26 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 150,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிலிபைன்ஸின் பல பகுதிகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பல பகுதிகளில் 100 கிலோமீற்றருக்கும் அதிகூடிய வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.