Browsing: புலம்பெயர்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு […]

இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் […]