Browsing: பிக்கு

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை […]

பம்பலப்பிட்டியிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான பழைய மூன்று மாடி வீடொன்றின் பூட்டை  உடைத்து உள்நுழைந்து அங்கு தங்கியிருந்தமை  தொடர்பில்  இரு  தேரர்கள் உட்பட மூவரைக்  கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாலம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும்  இரு தேரர்கள் உட்பட மூவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தேரர்கள் உட்பட மூவர் தனது தனது வீட்டின் பூட்டை உடைத்து உள்நுழைந்து  அங்கு பலாத்காரமாக  தங்கியிருப்பதாக  வீட்டின் உரிமையாளர் எனக் கூறிக்கொள்ளும் பெண் […]

வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நின்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இராணுவ பாதுகாப்புடன் வருகைதந்த பிக்கு குழு ஆலய வளாகத்தை பற்றி கலந்துரையாடியததோடு இந்து கோயிலின் சின்னங்களை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக சப்பாத்துக்காலுடன் நடந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.