Browsing: தாக்குதல்

மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மைச் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரேஷ்ட […]

கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ரஷ்ய “பொது போக்குவரத்துக் கப்பல்கள்” மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துளளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் “அரை நீரில் மூழ்கக்கூடிய கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய சிவிலியன் போக்குவரத்துக் கப்பல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்” என்று அழைக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது. ரஷ்ய ரோந்துப் படகுகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலைத் தடுத்ததாகவும், ஒரு உக்ரேனிய கடற்படை ஆளில்லா விமானத்தை பீரங்கித் தாக்குதலால் அழித்ததாகவும், மீதமுள்ளவற்றை மின்னணுப் […]

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது நொதேண் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு […]

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று…

கண்டி தேசிய வைத்தியசாலையில் மின்விளக்கை ஏற்றியதால் தூக்கம் கலைத்ததாக குறிப்பிட்டு, மூன்று சிற்றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் கடமை நேரத்தின் போது உறங்கிக் கொண்டிருந்த இந்த சிற்றூழியர், மின்விளக்கு ஒளிரவிடப்பட்டதால் தூக்கம் கலைந்ததாக குறிப்பிட்ட மூன்று சிற்றூழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பிரகாரம், அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவரது தாக்குதலால் காயமடைந்த மூன்று சிற்றூழியர்கள் 17ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சிற்றூழியரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று முன்தினம் (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.