Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சுகாதார
முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் […]
சுகாதார சேவை அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. மருத்துவர்களின் DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள தொகை 50000 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிற்கு வழங்கப்படும் 3000 ரூபா அப்படியே உள்ளது. மருத்துவ அதிகாரிகளுக்கு 35000 ரூபாவாக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், தமது கொடுப்பனவை அதிகரிக்கும் நோக்கில், இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் இன்றைய தினமும் காலை […]
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை நிதி அமைச்சு மற்றும் சுகாதாரத் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் […]
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார…