உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் மைதான வடிகால் புனரமைப்புக்கு 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

ஆசிரியர் பார்வை 4 மணி நேரம் முன்
82 பார்வைகள்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மழை காலங்களில் நீர் தேங்குவதால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யும் முகமாக வடிகால் வசதிகளை ஏற்படுத்துவதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை யை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் மன்னார் கல்வி வலயத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும்   வங்காலை  சென். ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம்  ஆகிய இரு பாடசாலைகளும் மடு கல்வி வலயத்தில் அடம்பன் மத்திய மகா வித்தியாலயம், பண்டிவிரிச்சான் மாகவித்தியலயத்தினுடைய  மைதான அபிவிருத்தி பணிக்ளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், பாடசாலைகளில் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இத்திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், தேசிய மக்கள் சக்தியின் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் பாடசலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்